பங்கு வரலாறு

நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலயம் ஒரு சிறு குருசடியுடன் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில், அசிசி பள்ளி வளாகத்தின் மேற்குப் பகுதியில் அருட்தந்தை இரபேல் சில்வா அடிகளார் இயேசுவின் திரு இருதயத்திற்கு ஒரு சிறு குருசடி அமைத்து மாலை நேரங்களில் செபமாலையும் வழிபாடும் நடத்தினார். அதைத் தொடர்ந்து, அருட்பணி. பெனடிக்ட் அலெக்சாண்டர் அன்றைய ஆயர் மேதகு ரோச் ஆஞ்ஞிசாமி அவர்களின் அனுமதியுடன் அச்சகத்தோடு இணைந்த ஒரு சிற்றாலயத்தை (Private Chapel) ஏற்படுத்தி, நாகர்கோவில் நகரப் பகுதி மக்களுக்காக திருப்பலியும், மறைக்கல்வியும் நடத்தினார். 1963இல் அருட்பணி. J.N. சீசர் அவர்கள் இச்சிற்றாலயத்தில் தினமும் காலைத் திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைத் திருப்பலியும் நிறைவேற்றினார். இருப்பினும், இது கோட்டாறு பங்காகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் நகர மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள் தற்போதுள்ள ஆலயத்திற்கு 19.03.1977 அன்று அடிக்கல் நாட்டினார். ஆலயக் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்து 07.12.1979 அன்று இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. அதுமுதல், நாகர்கோவில் கோட்டாறு பங்கின் கிளைப்பங்காக அருட்பணி. ஜோசபாத் மரியா அவர்கள் பொறுப்பில் செயல்படத் தொடங்கியது. பின்னர், 1980 டிசம்பர் 15ஆம் நாள் நாகர்கோவில் தனிப்பங்காக உருவானதுடன், அருட்பணி. S. பர்ணபாஸ் அவர்கள் முதல் பங்குத் தந்தையாக நியமனம் செய்யப்பட்டார். இவ்வாண்டு (2025), நமது பங்கு 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

அன்பானவர்களே…

இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க, அவரின் தூய்மைமிகு இதய அன்பை, எங்கள் குடும்ப விழாவாகக் கொண்டாடுகின்றோம். இவ்வாண்டின் குடும்பவிழா சிந்தனைகளாக “அவர் நம்மை அன்பு செய்தார்” (Dilexit Nos) என்ற முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இயேசுவின் இதய அன்பை பற்றிய திருத்தூது மடலிலிருந்து சிந்தனைகளை உள்வாங்க இருக்கிறோம். பங்கேற்று நிறை ஆசீர் பெற அன்பாய் அழைக்கின்றோம்.

ஜூன் 25 முதல் 29 வரை

குடும்ப விழா நிகழ்வுகள்: ஜூன் 25 – ஜூன் 29, 2025

பங்கு குடும்ப விழாவுக்கு வாருங்கள்!!!

© Copyright - Sacred Heart of Jesus Church - Nagercoil